தொட்டால் சுருங்கும் செடி” – இயற்கையின் வெட்கம் கொண்ட அதிசயம்!

 


நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையில் சில விஷயங்கள் நம்மை நிமிடங்களில் ஆச்சரியப்படுத்தும். அதில் மிகவும் வித்தியாசமான ஒன்று தான் தொட்டால் சுருங்கும் செடி (Mimosa pudica). இந்தச் செடியை நீங்கள் மெதுவாக தொட்டாலே, அது உடனே தன் இலைகளை மடக்கிக் கொண்டு என்னை தொட்டாதே! என்று சொல்லும் மாதிரி ரியாக்ட் செய்யும். இதை முதன்முதலாக பார்க்கும் போது, ஒரு செடி இவ்வளவு வேகமாக பதில் அளிப்பது உண்மையிலேயே ஒரு மாயாஜாலம் போல தோன்றும்.

இந்தச் செயலுக்கு பின்னால் ஒரு சின்ன விஞ்ஞான ரகசியம் இருக்கிறது. இலைகளின் அடிப்பகுதியில் உள்ள செல்களில் நீர் அழுத்தம் (turgor pressure) திடீரென குறையும்போது, இலைகள் மடங்கிவிடுகின்றன. இதனால் தான் இந்த வேகமான மூடல் நடக்கிறது. ஆனால் இதைப் பார்க்கும் போது அது வெட்கப்பட்ட மாதிரி தெரியும் அதனால் தான் இதற்கு வெட்கம் கொண்ட செடி என்ற பெயர் வந்தது.

இது மட்டும் இல்லாமல், இந்தச் செடி இரவு நேரங்களில் தானாகவே இலைகளை மூடி தூங்கும் போல இருக்கும். காலை சூரியன் உதிக்கும் போது, மீண்டும் இலைகள் திறந்து உயிரோட்டமாக மாறும். இயற்கையின் ஒரு அழகான ரிதம் இதிலேயே தெரிகிறது.

மேலும், இந்தச் செடியின் சுருங்கும் தன்மை ஒரு பாதுகாப்பு யுக்தி. இதை சாப்பிட வருகிற சிறிய பூச்சிகள் அல்லது விலங்குகள், இலைகள் திடீரென மடங்குவதால் பயந்து விலகிவிடும். பேச முடியாத ஒரு செடி இப்படிப் புத்திசாலித்தனமாக தன்னை காப்பாற்றிக் கொள்வது உண்மையிலேயே ஆச்சர்யம்!

சின்ன பிங்க் அல்லது ஊதா நிற பூக்களுடன் இருக்கும் இந்தச் செடி, குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒருலைவ் சயின்ஸ் ஷோமாதிரி. அடுத்த முறை இந்தச் செடியை பார்த்தால், மெதுவாக தொட்டு பாருங்கள்அது உங்களுக்காக ஒரு சிறிய மாயாஜாலம் காட்டும்!


📞 For any Farming related assistance or Farmland Purchase around Chennai

🌐 Visit: www.namkudil.com

📱 WhatsApp: 7448408987

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலை வென்ற பண்டைய தமிழர்கள்